It

Thursday, June 20, 2013

ஊடகவியலாளர் தில்கா சமன்மலீயிடம் மாட்டிக் கொண்டார் ஞானஸார தேரர்!



தான் மதுவருந்தி வாகனம் ஓட்டியதையும் தண்டப்பணம் செலுத்தியுள்ளதையும் ஒப்புக்கொண்டார்.....!!!!


தமிழில் - கலைமகன் பைரூஸ்

வார வாரம் தெரண தொலைக்காட்சியில் இடம்பெறும் தெரண 360 நிகழ்ச்சியில் இவ்வாரம் கலந்துகொண்டவர் , பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸாரதேரர். அவரை அரசியல்சார் விடயங்களுடன் தொடர்புபடுத்தி பேட்டி கண்டவர் ஊடகவியலாளர் தில்கா சமன்மலீ. 

ஞானஸார தேர்ர், சிங்கள பௌத்தர்கள் பற்றிக் குறிப்பிடும்போது சூது மற்றும் மதுபானம் தொடர்பில் சிங்களவர்கள் தங்களது பரம எதிர்ப்பை வெளிக்காட்டக்கூடியவர்கள் எனக்குறிப்பிட்டார். 

அப்போது தில்கா இடையில் குறுக்கிட்டார். 

நீதிமன்றம் குற்றத்தை முன்வைத்தது. குற்றவாளி ஞானஸார தேரர். 9 வழக்குத் தாக்கல்கள். அனுமதிப் பத்திரமின்றி அதிக போதையுடன் வாகனம் ஓட்டியமை அதில் முக்கியமானது. அவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் தில்கா மிகவும் காரசாரமான முறையில் கேள்விகளை முன்வைத்தார். கேள்விக்கு பதிலளிக்கவியலாமல் ஞானஸார்ர் திக்குமுக்காடி கதையை மாற்றியமைக்க முனைந்தபோதும் தில்கா விட்டபாடில்லை. மருத்துவ அறிக்கைகள் மூலம் அது உறுதிப்பட்டதே என தில்கா குறிப்பிடும்போது, தேரர், மற்றைய கேள்விக்குப் போவோமா? எனக் கேட்டார். 

அத்தோடு, பஞ்ஞரத்ன தேரர் பற்றி ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, அவ்வாறான பிக்கு ஒருவர் பற்றித் தனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். இரண்டு விநாடிகள் செல்லவில்லை. பின்னர் முன்பின் முரணாக பஞ்சரத்ன தேரர் பற்றித் தனக்குத் தெரியுமென்றும், ஆயினும் அவர் தங்கள் இயக்கத்தின் விமர்சனப் பிரிவில் கடமைபுரியவில்லை எனவும் குறிப்பிட்டார். 

ஆயினும், 2012 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, ஞானஸார தேரர், பஞ்சரத்ன தேரர் விசேட விமர்சனப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். அது பற்றிய இறுதியாகவுள்ள காணொளியில் காணலாம். 

எதுஎவ்வாறாயினும், கீழே நீதிமன்றம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தெரண 360 செவ்வியில் தில்கா ஞானஸார தேர்ரிடம் வினாக்கள் இடைமறித்து, வினாக்கள் தொடுத்த முக்கிய பகுதிகள் கொண்ட காணொளி என்பன கீழுள்ளது. 

ஞானஸார தேர்ருடன் தில்கா கண்ட செவ்வியின் முழுமையான தமிழ் வடிவம் வெகுவிரைவில் பதிவேற்றப்படும்.......

(கலைமகன் பைரூஸ்) 

<iframe width="640" height="480" src="//www.youtube.com/embed/0PNaulVo104?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>

0 comments:

Post a Comment