It

Sunday, August 11, 2013

இவர்கள் புத்த பகவானின் எதிரிகள்! - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா

(நாளைய ராவய வாரப் பத்திரிகையின் (2013/08/11) ‘மே அய புதுன்கே ஹத்துரோ’ (මේ අය බුදුන්ගේ හතුරෝ - එස්. පී. පුංචිහේවා , සටහන - ටිරන් කුමාර බංගමආරච්චි) எனும் கட்டுரையின் தமிழாக்கம் இது. காலத்தின் தேவை கருதி இது இங்கு பதிவேற்றப்படுகிறது.

தமிழாக்கம்: கலைமகன் பைரூஸ்)




ரத்துபஸ்வல
இன்று பொதுமக்களுக்கு தங்கள் பிரச்சினைகளை துயரங்களைச் சொல்வதற்கு இன்று ஒருவரும் இல்லை. சொல்லக் கூடிய முறையும் இல்லை. அதற்காக இருந்த அமைப்பு முறைமையெல்லாம் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அவர்களின் பிரதிநிதிகளின் மூலமாகவேனும் பிரச்சினைகளைச் சொல்லவியலாது. அதுவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஊடகங்களின் வாயிலாகப் பிரச்சினைகளை வெளிக்கொணர முடியவில்லை. அதுவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை உண்ணா விரத்த்தின் மூலமும், கிளர்ச்சியின் மூலமும், ஊர்வலங்களின் மூலமே வெளிக்கொணர வேண்டியுள்ளன. ரத்துபஸ்வெல நிகழ்வும் அவ்வாறுதான். பயங்கரவாதிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கை போன்றுதான் அதுவும் இருந்த்து. இதிலிருந்து விளங்குவது யாதெனில், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்காகக் கையாண்ட உண்ணார விரதம், கிளர்ச்சி, ஊர்வலங்களுக்கும் கைவைக்கப்பட்டு அவையும் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன என்பதே உண்மை என்பதே எனது கணிப்பீடு. இந்நாடு வெகுவிரைவில் இராணுவ ஆட்சி முறையொன்றை ஏற்படுத்தும் என்பதனை எண்ணிப் பார்ப்பதற்கு ரத்துபஸ்வெல நிகழ்வு எங்களை கட்டாயப்படுத்துகின்றது. பொதுமக்கள் இதனைச் சரிவரப் புரியாமல் இருப்பது துரதிர்ஷ்டமாகும்.

ஊடகங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
பொதுமக்கள் இன்று தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க்க் கூடிய முறையில் ஊடகமொன்றும் இல்லை. இன்று ஊடகங்களிற் சில பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. ஏனையவை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறன்றி இன்று பொதுமக்களின் பிரச்சினைகளைப் பேசக்கூடிய ஊடகம் ஒன்றும் இல்லை.

இராணுவம்
இராணுவம் எனப்படுவது இல்லாதொழிக்கும் ஒரு உபகரணம். சிங்கள தமிழ் பேதம் அதற்குக் கிடையாது. கட்டளை வந்ததும் அழித்தொழிக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்கெனக்கூறி நாங்கள் எங்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு பாரிய இராணுவத்தை போசிக்கிறோம். இன்று யுத்தம் இல்லை. அவ்வாறாயின் யுத்தத்திற்கென இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை அப்பதவியிலிருந்து நீக்கி அவர்களுக்கு வேறு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் அவ்வாறு செய்யப்பட்டது. ரெய்பியல் தென்னகோன் என்பவர் கூட ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டது அவ்வாறுதான். இன்று அவ்வாறில்லை. இராணுவத்தினரை அனுப்பி எல்லா வேலைகளையும் செய்துகொள்கிறார்கள். பொதுமக்களின் பணத்தைக் கொண்டு இவ்வாறு இவர்கள் நடத்தப்படுவதுதான் அபாக்கியநிலையாகும். கடைசியில் அதேபொதுமக்கள் அடி உதைபட்டு கொல்லப்படுகிறார்கள். அழிப்பின் ஆயுதத்தை பொதுமக்கள் மத்தியில் அனுப்பி, அவர்களை தமக்கேற்றாற் போல வழிநடாத்தி ஆட்சியாளர்கள் இலாபம் பெறுகிறார்கள். அதுதான் இராணுவம்.

எதிர்க்கட்சி
எல்லாம் போலவே எதிர்க்கட்சியும் இன்று அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மிக சூட்சுமமான முறையில் அதனை அடக்கியுள்ளது. அதனாற்றான் இன்று எதிர்க்கட்சி மிகவும் பின்தங்கியுள்ளது. எதிர்க்கட்சி இதனை இன்னும் சரிவரப் புரிந்துகொள்ளாமை துர்ப்பாக்கியமாகும். சரியாயின் பொதுமக்களின் பிரச்சினைகளின் போது, அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி தாம் செல்லக் கூடிய வழிக்கு அவர்களை உள்வாங்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்கள் அக்கட்சிக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் கைகலப்பதே அவர்களின் வேலையாக இருக்கிறது. ஒரு விடயத்தை நாம் இங்கே மறக்கக் கூடாது. அவர்களுக்கும் கூட இந்நாட்டு மக்களின் பிரச்சினை பெரிதாகத் தெரிவதில்லை. எவ்வாறாயினும் அரசாங்கத்தைக் கைப்பற்றி தற்போதைய அரசாங்கம் செய்யும் கருமங்களைச் போலவே அவர்களும் செய்யவே முந்தியடிக்கிறார்கள். இருசாராரும் ஒரே கொள்கையுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

விஜேவீரவும் பிரபாகரனும்
இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. இவ்விருவரையும் அவர்களின் அவ்வவ் மாகாணங்களிக் அவ்வவ் இனங்களுக்கு ஏற்பவே நாம் கணிக்க வேண்டும். இங்கு விஜேவீரவுக்கு நன்மையொன்று இருக்கிறது. அதுதான், அவர் மக்களை விளித்த முறைமை. அது அவருள் இல்லாதிருந்த போதும், அவ்வார்த்தையை மக்கள் எடுத்துச் செல்ல முடியும். ஆனால் பிரபாகரன் முழுமையாக இனவாதத்தை சித்தாந்தமாகக் கொண்டவர். விஜேவீரவிடமும் தமிழ் இனவாதம் இருந்தது. அது வேறு விடயம். எது எவ்வாறாயினும் இருவரிடமும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மிலேச்சத்தனம் குடிகொண்டிருந்தது. சாதித்துவ பிரச்சினை இருவரிடமும் இருந்தது. இருவரும் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

பிக்குமார்?
இன்று பிக்குமார் வீதிக்கு வந்துவிட்டார்கள். வீதிக்கு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட உண்மையானதல்ல. இந்த பிக்குமார் வீதிக்கு வருவது, தங்களிடையே இருக்கின்ற கற்பிதமான கருத்தை மக்களிடையே புகுத்துவதற்கன்றி வேறில்லை. இவர்கள் புத்தபெருமானின் சேவகர்களாக எனக்குக் காட்சி கொடுக்கவில்லை. புத்த பெருமானின் விரோதிகள். சமயத்திற்கு இழுக்குண்டாகும் வண்ணம் உபதேசம் புரியும், சமயத்தை அழித்தொழிக்கும் புரோகிதர்கள் இவர்கள்.

விவாகரத்து
விவாகரத்துக்கு காரணமானவற்றை நீதிமன்றம் அறிவித்ததும் விவாகரத்து செய்வது வேறுவிடயம். ஒரு விடயத்தில் நாங்கள் மிகவும் தெளிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் அநியாயம் இழைக்கப்படுபவர்கள் பற்றி நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதையே நான் இங்கு சொல்கிறேன். இருக்க முடியாது விட்டால் போய்விடு எனச் சொல்வது இலகுவானதுதான். என்றாலும் அதன் மூலம் அநீதியிழைக்கப்படுவர்களுக்கு சரிவர நீதிகிடைக்கிறதா என்று நாங்கள் பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் கைவிடப்படுவது அநேகம். அவர்கள் சமூகத்தின் கவலைக்கிடமானவர்களாக மாறிவிடுகிறார்கள். எனவே நாங்கள் அவர்கள் விவாகரத்து செய்வதற்கு முன்னர் அதுபற்றிச் சிந்திக்க வேண்டும். இழப்பீடு கொடுத்து எதனையும் சரி செய்ய முடியாது.

தூக்கு மேடை (தூக்கு மரம்)
தூக்கு மேடையின் மூலம் ஒரு போதும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. கடந்த காலங்களில் பொலிஸிலிருந்து தப்பித்து செல்ல முயன்றதற்காக பாதாள உலகக் கோஷ்டியினர் எனக்கூறி 60 இற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். இது அதிகார பூர்மற்ற தூக்குமேடை. இதனால் பாதாள உலகத்தினர்தான் குறைந்தார்களா? கொலை செய்வது காட்சிப்படுத்தப்பட்டாலும் குற்றங்கள் குறையாது. அதற்கு கல்விசார் முறைகள் மூலமே விடை காண வேண்டும். சிறையில் அடைத்து, தண்டனை வழங்கி புனருத்தாபனம் செய்வதுதான் சரியான வழிமுறை. தூக்குமேடை பரிகாரமே அல்ல. ஒருவர் இன்னொருவரை கொலை செய்தால், கொலை செய்யப்பட்டவரின் முழுக் குடும்பமும் அநாதையாகிவிடுகிறது. கொலை செய்தவன் தூக்கு மேடைக்கோ ஆயுள் தண்டனையோ பெற்றுவிட்டால் அந்தக் குடும்பமும் அநாதையாகிவிடுகின்றது. அவ்வாறாயின், சிறந்த கல்வி முறைமையினூடாக சமூகத்தை வழிநடாத்தி மேலெழச் செய்வதே இதற்கான வழியாக இருக்கின்றது. அவ்விடத்திற்குத்தான் நாங்கள் சமூகமாகத் தள்ளப்பட வேண்டும். அவ்வாறன்றி, தயாசிரி போவாரா இல்லையா என்று தேடுதலில் ஈடுபடுவதல்ல.

மதுபானம்
மதுபானம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது வைத்தியர்களின் அபிப்பிராயம். அதேபோல சிறிய அளவில் மதுபானத்தைப் பாவிப்பதில் குற்றம் இல்லை எனக் குறிப்பிடுபவர்களும் வைத்தியர்களே. எனக்குள்ள பிரச்சினை அதுவல்ல. இந்த போத்தல்களில் அடைத்து மேசையின் மீது வைப்பது பயனற்ற பேச்சுக்கள், கெட்ட – மிக அசிங்கமான வார்த்தைகள், மற்றவர்களின் குற்றங்கள், குடும்பப் பிரச்சினைகள் போன்ற ஆயிரமாயிரம் பிரச்சினைகள். அவ்வாறாயின் மதுபானம் ஆகும் என எவ்வாறு சொல்வது?

0 comments:

Post a Comment