It

Tuesday, April 28, 2015

துப்பாக்கியுடன் மைத்திரி அருகில் வந்தவர் யார்? உண்மை ஏது என தெளிவுறுத்துகிறது மகிந்த ஆதரவு இணையத்தளம்!

April 28, 2015 at 12:01 am | Pariwarthanam.Blogspot.Com 

நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அருகில் வந்தார் என அடிக்கடி வெளியாகின்ற செய்திகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற இணையத்தளம் ஒன்று கீழ்வருமாறு கருத்துரைத்துள்ளது. அதன் மீள்மொழிவு கீழ்வருமாறு -

தமிழில் - கலைமகன் பைரூஸ்

 [1]. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை கொலை செய்வது தொடர்பான செய்தியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவினர் கட்டவிழ்த்துள்ளனர். எங்களுக்குத் தெரிந்த வகையில் அந்த சேறுபூசுதலின் குறிக்கோள்கள் வருமாறு.

(i). மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைக் குறைப்பதற்கு ஆவன செய்வது.

(ii). மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசுதல்.

(iii).
தர்க்க ரீதியாக பார்க்குமிடத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தல் விளைவிப்பது ஐதேக என்பதால் (அப்போதுதான் ரணில் விக்கிரமசிங்க இயல்புநிலையாக ஜனாதிபதியாவதால்) அவருக்கு ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றால் அதனை மகிந்த பிரிவினரில் தலையில் தூக்கிப் போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையேற்பட்டிருக்கின்றது.

[2]. அதில் ஒரு திட்டமாக, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமன் உறவுமுறையான ரஞ்சித் விஜேவர்தன மற்றும் மைத்துனரான  ருவன் விஜேவர்தன ஆகியோருக்குச் சொந்தமான “லங்காதீப”  பத்திரிகை மூலம் வெளியான செய்தியொன்றும்,

அந்தச் செய்தியானது இதனை விடவும் வித்தியாசமான முறையில் ஏனைய ஐதேக சேறுபூசும் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தாலும், அவற்றின் உரிமையாளர்கள் வெளியீட்டாளர்கள் அல்ல என்பதால் எவ்வித பொறுப்புக்களும் இல்லையாதலால் அவர்களுக்கு எதனையும் எழுத முடியும் என்பதை பொதுமக்கள் கவனத்திற் கொள்வர் என நாங்கள் கருதுகின்றோம். அதனால் “லங்காதீப” பத்திரிகை பற்றி மட்டுமே நாங்கள் இங்கு சிந்தனையைச் செலுத்துவோம்.

(i). அங்குனுகொலபெலெஸ்ஸவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர்களுக்கான கூட்டமே இடம்பெற்றது. என்றாலும் அக்கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அழைப்பின் பேரிலேயே அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவ்விடயம் பற்றி லங்காதீபவில் குறிப்பிடப்படவில்லை.

(ii). எந்தவொரு இராணுவ “கோப்ரல்” அல்லது வேறு எந்தவொரு இராணுவ அதிகாரியும் இதுவரை நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பாளர்களாக இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, மேற்சொன்ன துப்பாக்கி ஏந்தி வந்த இராணுவ வீர்ர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி என குறிப்பிடுவது பொய்யாகும்.

(iii). அவ்வாறு அங்கு வந்திருந்தவர் இராணுவத்தினரிடம் இருந்து விடுகை பெற்று வந்துள்ள இராணுவ வீர்ரொருவரே. தனது பிரதேசத்தில் நடைபெறும் கூட்டமான்று என்பதனாலும், நாட்டின் ஜனாதிபதி, சபாநாயகர் உள்ளிட்ட நாட்டின் பிரபல்யங்கள் பலர் அக்கூட்டத்திற்கு வருகை தருவதால் அதனைக் கண்ணுறுவதற்காகவே அந்த இராணுவ வீர்ரும் அங்கு சமுகமளித்துள்ளார். சாதாரண பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே அவரும் உட்கார்ந்திருக்கின்றார். 


(iv). இனி, அவர் இராணுவத்தில் சேவை செய்யும் இராணுவ வீரர்களில் ஒருவர் என்பதால், ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் (அவர்களும் இராணுவ வீரர்கள் ஆதலால்) அவரைத் தெரிந்துகொண்டுள்ளனர். ஏன் இங்கு வருகை தந்திருக்கின்றீர்கள் என வினவியிருக்கின்றனர். அவரும் பதில் கூறியிருக்கின்றார். (நாட்டின் ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோர் வருகை தந்திருப்பதனால் அவர்களைப் பார்ப்பதற்காக அவர்களைப் பார்ப்பதற்காக வந்தேன்.)

(v).
அவரிடம் துப்பாக்கி இருக்கவே இல்லை. அவரிடம் அவ்வாறானதொரு துப்பாக்கி இருந்திருக்குமானால் அவர் அங்கு எவ்விதத்திலும் சென்றிருக்க முடியாது. இதனை நேரடியாகக் கண்ணுற்ற ஸ்ரீசுக உறுப்பினர்கள் எங்களிடம் அறிவித்தற்கு ஏற்ப, அவரிடம் ஒரு பணப்பை, நீரருந்தும் ஒரு “போத்தல்”, மற்றும் ஒரு கைக்குட்டை என்பன மாத்திரமே  இருந்திருக்கின்றன.

(vi). கீழ்வருவன “லங்காதீப”வில் பிரசுரமானவை -

பொலிஸ் விசேட பிரிவினர் நாமலின் பாதுகாப்பாளரைச் சோதனையிட்ட போது அவரிடம் துப்பாக்கியொன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை (அந்த இராணுவ வீரரை) அவ்விடத்தினின்றும் திருப்பியனுப்பியுள்ளனர்.

நல்லாட்சியில் வெளியான முக்கிய பொய் அங்குதான் முதலிடம் பெறுகின்றது. ஏதேனும் ஒருவகையில் நாட்டு ஜனாபதியின் பக்கமாக அனுமதியின்றி துப்பாக்கி அல்லது ஏதேனும் ஒரு (கூரிய) ஆயுதத்தை எடுத்துவருபவர் கைது செய்யப்பட வேண்டும். ஆயினும், “குறித்த நபர் அங்கிருந்து திருப்பியனுப்பப் பட்டார்” எனச் சொல்லப்பட்டுள்ளது. துப்பாக்கி ஒன்று கொண்டுவந்தார் எனும் கதை “பச்சைப் பொய்” என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

(vii). அவ் இராணுவ வீரர் கைது செய்யப்படவில்லை. அவர் எவ்விதக் குற்றமும் இழைக்கவில்லை ஆதலால், (அதாவது அவர் குறிப்பிடுகின்றது போல அவர் துப்பாக்கியொன்று கொண்டு வரவில்லை ஆதலால்) அவர் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டார். கும்பிடப் போன கோயில் உடைந்து விழுந்தாற் போல, நாட்டின் புதிய ஜனாதிபதியைப் பார்வையிடுவதற்காக வந்தவரிடம் கேள்விக் கணைகள் தொடுத்த போது அவ்விராணுவ வீரர் சென்றுவிட்டார். விடுமுறை பெற்றுவந்துள்ள ஓர் இராணுவ வீரர் நாட்டின் ஜனாதிபதி கலந்து கொள்கின்ற கூட்டமொன்றைப் பார்ப்பதற்கு உட்காருவது தடை என்பதை நாங்கள் இப்போது ஊகித்துக் கொள்கின்றோம்.

(viii). தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முக்கியத்தரான எஸ்.எம். விக்கிரமசிங்க பற்றியும் லங்காதீப கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நல்லாட்சி குறிப்பிடுவது போல ஜனாதிபதியின் அருகில் துப்பாக்கியொன்றுடன் அருகே செல்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால், அக்கணமே எஸ்.எம். விக்கிரமசிங்க பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமைக்குக் காரணம் அவ்வாறான துப்பாக்கியொன்று அங்கு காணப்படவில்லை என்பதனாலேயே ஆகும்.

[3]. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய கூட்டங்களுக்குச் சமுகமளிக்கும் எந்தவொரு நிராயுத இராணுவ வீரரரையும் திருப்பியனுப்புவதில்லை. அதுமட்டுமன்றி, அவர் வடக்கு கிழக்கில் யுத்தகளத்தில் இருந்த இராணுவ வீரர்களிடமும் சென்றார். இராணுவ வீரர்கள் படுபயங்கர ஆயுதங்களுடன் யுத்தம் செய்யும்போது அவர்களைக் காணச் சென்றார். யுத்தத்தை வென்ற தலைவனின் தன்னிகரற்ற செயல் அதுதான். வாகரையில்  பாரிய யுத்தத்தில் வெற்றிவாகை சூடிய இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகச் சென்றவேளை...

[4]. மகிந்த ராஜபக்ஷவுக்கு அச்சுறுத்தலாக புலிப் பயங்கரவாதிகளும் அவர்களின் ஒத்துழைப்பாளர்களும் இருந்தார்களேயன்றி இலங்கை இராணுவ வீரர்கள் அல்லர். அன்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அனைத்து முப்படைகளும் இருந்தபோதும், இன்று அவருக்கான பாதுகாப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

(i). அதற்கான காரணமாக இருப்பது, மகிந்த ராஜபக்ஷ செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆயிரக் கணக்கில் அவரைச் சூழ்ந்துகொள்வதும், அது நல்லாட்சியிலுள்ள சிலரின் கண்களில் முள் தைக்க வைக்கும் விடயமாக இருப்பதனாலுமாகும்.

(ii). புலம்பெயர்ந்த தமிழர்களின் தடையை நீக்கியதோடு வெளிநாடுகளில் வசித்துவருகின்ற புலி ஆதரவாளர்கள் எவ்வித தடையுமின்றி ஸ்ரீலங்காவுக்கு வர முடியும் என்பதால் அவரின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

(iii). லங்காதீபவில் குறிப்பிடப்பட்ட போலித் துப்பாக்கி போன்ற கதை, நல்லாட்சி அரசினாலும் கட்டவிழ்க்கப்பட்டமைக்கான காரணம் அதனைச் சரிசெய்வதற்கேயாகும்.

– mahinda.info

0 comments:

Post a Comment