It

Wednesday, June 28, 2023

குருந்தி பௌத்த உரிமை, இனவாதிகளும் வீரர்களும்!

 


ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியம், நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை தடுக்கும் காரணி அல்ல. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கையின் கலாசார பாரம்பரியம் எமது நாட்டின் இனங்களுக்கிடையிலான இடையூறாக தடையாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. அவ்வாறு ஏற்படுதவதற்குக் காரணம் இனவாத, பிரிவினைவாத அரசியல் தலைவர்களினால் மாத்திரமல்ல, இந்நாட்டில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை முகாமைத்துவத் துறையில் காணப்படும் குறைபாடுகளாலும் இது நிகழ்ந்துள்ளது.

இந்த நாட்டில் கலாச்சார பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான சரியான தேசிய கொள்கை இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

கலாச்சார பாரம்பரியம் அமைதியின் தூதுவர்களாக இருக்க வேண்டும், மாறாக மோதலுக்கு காரணமாக இருக்கக்கூடாது. இலங்கையின் விலைமதிப்பற்ற கலாசார பாரம்பரியம், நாட்டில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் சமாதானம், புரிந்துணர்வு மற்றும் நட்புறவை ஏற்படுத்துவதற்கு சக்திவாய்ந்த காரணியாக இருக்க வேண்டும்.

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் திடீர் இராஜினாமா, ஜனாதிபதியின் வரலாற்றுப் பாடம், இனவாத தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் என்பன இன்றைய நாட்களில் அனைவரினதும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஓர் இரவில் முகநூலில் இனவெறிக் குறிப்புகள் எரிய ஆரம்பித்து நாட்டின் கலாசார பாரம்பரியத்தை சீர்குலைத்துள்ளது. பாரம்பரிய தமிழ் மக்களின் குறிப்பாக விவசாயிகளின் காணிகளை சிங்கள இனவாதிகள் ஆக்கிரமித்து துன்புறுத்துவதை இச்சம்பவம் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. அதனால்தான் இந்த நிகழ்வில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அத்துடன் நாட்டின் தொல்லியல் பாரம்பரியத்தை பல சந்தர்ப்பங்களில் புறக்கணித்து காட்டிக்கொடுத்த தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் திடீரென துணிச்சலான அரச தலைவராக மாறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், வடகிழக்கில் இது போன்ற தொல்பொருட்கள் அழிப்பு இல்லை என்று தயங்காமல் கூறிய இயக்குநர் நாயகம், குருந்தி தூபியின் பொக்கிஷத் திருவிழா அன்று, பயந்து திரும்பிய பணிப்பாளர் நாயகம் தீவிரவாதிகள், திடீரென்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக வாதிடும் ஒரு சிறந்த பொது அதிகாரியாக மாறியுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்தின் வரலாற்றில் மிகவும் பிரபல்யமற்ற கரும்புள்ளிகளில் ஒன்றான பழங்காலப் பொருட்கள் திருடப்பட்டது இவரது காலத்தில்தான். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்பும் இன்றும் குருந்தி பௌத்த பாரம்பரியம் இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மற்றும் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் இலக்காக மாறியுள்ளது. இந்த முழுச் சம்பவத்தையும் ஒரு தரப்பினர் மட்டும் விசாரித்து முகநூலில் அவதூறு செய்ததால், மீண்டும் சிங்கள பௌத்தர்கள் மீது இனவாத முத்திரையை உலகத்தின் முன் வைத்தது. நம் நாடுதான் அவப்பெயரை அடைகிறது.

மேலும், நாங்கள் மீண்டும் மீண்டும் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் அடிப்படையில் நாடுகளுக்கிடையேயான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் தூரமாக்கும் செயற்பாடுகளை நாம் மேலும் மேலும் மேற்கொண்டு வருகின்றோம். குருந்தி பௌத்த பாரம்பரியம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கின் புராதன தலங்களும் குறுகிய மற்றும் பலதரப்பட்ட இலக்குகளை கொண்டவர்களின் கைக்கூலிகளாக இருப்பதால், எமது நாட்டின் கலாச்சார பாரம்பரியம் இனவாதிகளின் இலக்காக மாறியுள்ளது. மென்மேலும் நாம், நமது பாரம்பரியத்தை அச்சுறுத்தி வருகிறோம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் புராதன பாரம்பரியம் மற்றும் அவற்றின் பாரம்பரிய முகாமைத்துவ நடைமுறைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பஷெட் மெஸிவ்லி முறைப்பாடு செய்த போது இந்த பயங்கர ஆபத்தை நாம் முன்னறிவித்தோம். கடந்த ஆண்டு கோல்பேஸ் போராட்டத்தின் போதும், பிரைட் அணிவகுப்புகளின் போதும் வடக்கில் பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட்டதாக பலகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்ட போது இந்த ஆபத்தை நாம் முன்னறிவித்தோம்.

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கு முறையான தேசிய கொள்கையின் அவசியத்தை நாம் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, சிங்கள தமிழர்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லாத வகையில் நாட்டின் தொல்பொருள் செயற்பாடுகள் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றோம். ஏனெனில் இனவாத மற்றும் பிரிவினைவாத அரசியல் தலைவர்கள் சிங்கள பௌத்தர் மீது இனவாத முத்திரையை ஒட்ட காத்திருக்கின்றனர். அவர்களின் சமீபத்திய துப்பு நாட்டின் விலைமதிப்பற்ற பண்டைய பாரம்பரியம்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் துறை பணிப்பாளர் நாயகம் இந்த தவறுகளில் இருந்து பாடம் படிப்பார் என்று நம்புகிறோம்.


அமா எச். வன்னியாராச்சி.

தமிழில்- கலைமகன் பைரூஸ்

0 comments:

Post a Comment