It

Tuesday, January 20, 2015

தேர்தலன்று? இராணுவச் சூழ்ச்சி பற்றிய கதை என்ன?

2015 ஜனவரி மாதம் 20 12:51:06 | பரிவர்த்தனம்

ஜனவரி எட்டாம் திகதி இரவு இந்நாட்டின்  பல்லாயிரக் கணக்கான மக்கள் தொலைக்காட்சியின் முன்னே நின்றுகொண்டு கண்களையும் காதுகளையும் கூராக்கிக் கொண்டு புதிதாக வரவுள்ள ஜனாதிபதி யாரோ என்பதைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தனர். சிலர் மகிந்தரைக் கேட்டனர். மற்றும் சிலர் மைத்திரியே வெல்வார் எனக் கூறினர். எட்டாந் திகதி இரவு இந்த தேர்தல் மிகவும் சூடுபிடித்திருந்தது.

17_PAGE_10_M
ஒன்பதாந் திகதிக்கான சூரியன் மெல்ல மெல்ல உலகினை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளை, வெளியாகிக் கொண்டிருந்த முடிவுகளுக்கு ஏற்ப பலருக்கும் வெற்றி வாய்ப்பு மைத்திரிக்குத்தான் என்பது தெளிவாகியது. மைத்திரி வென்று விட்டார் என்று தெளிவாகியது. அப்போதும் அலரி மாளிகையில் மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையே அது. வெளிவந்த செய்திகளுக்கேற்ப ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட அக்கணமே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பினை ஏற்படுத்தினார். தான் ரணிலைச் சந்திக்க வேண்டும் என்று கூறும் போது அதிகலை மணி நான்கு இருக்கும்.

ஒரு மணித்தியாலம் செல்வதற்கு முன்னரே ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தேறியது மகிந்தவின் அழைப்பின் பேரில் ரணில் அலரி மாளிகைக்கு சென்றதனாலேயே. தான் பொதுமக்களின் விருப்பிற்குத் தலை சாய்த்து அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாகவும், புதிய ஜனாதிபதி மைத்திரிபால அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் மகிந்த சொன்னார். அத்துடன் தான் மைத்திரியுடன் உரையாடத் தேவையாக இருப்பதாகவும் சொன்னார். அக்கணமே ரணிலின் கைத்தொலைபேசி மகிந்தவின் கைக்கு மாறியவுடனேயே மைத்திரிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மைத்திரி தனது பழைய தலைவருக்கு“சார்” என்று விளித்தே கதைத்தார்.

அந்த வரலாற்றில் அழியாத சில மணித்தியாலங்களின் பின்னர் வெளியே வந்தவை பற்றி நாம் அப்படியான கதையொன்றைத்தான் சொன்னோம்.

ஆயினும் தற்போது கேட்கக் கிடைப்பது அதற்கு மாற்றமானதொரு செய்தியே.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்து மூன்று நாட்களின் பின்னர் அதாவது 11 ஆம் திகதி மார்கஸ் மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று தயாராக இருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர் மங்கள சமரவீர. மங்கள நேரகாலத்துடனேயே முக்கிய விடயமொன்றை வெளிக்கொணர்வதற்காக காத்திருந்தார். மங்கள உரையாற்ற ஆரம்பித்தார்.

“பொதுமக்களின் விருப்பினை ஏற்று ஜனநாயக முறையில் தனது வீட்டை நோக்கிச் செல்வதற்காக அல்ல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் தீர்மானித்திருந்தார். எட்டாம் திகதி இரவு தனக்கு தோல்வி நிச்சயமே என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் அவர் அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் இராணுவச் சூழ்ச்சி மூலம் அதனை மாற்றியமைக்கமே முயன்றார். தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதற்காக அவர் முயற்சி செய்தார் என்பதை நான் பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். இராணுவத்தினரை அழைத்து வாக்குகள் எண்ணுவதை நிறுத்தவும் முயன்றார். இராணுவத் தளபதி, சட்டமா அதிபர், பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை அழைத்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துவது எங்ஙனம் என ஆலோசித்தார்.” இதுபற்றி சொல்லிய வாயுடனேயே மங்கள இது தொடர்பில் மைத்திரி அரசாங்கத்தின் கீழ் விசாரணை நடாத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நள்ளிரவு ? நடைபெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சி பற்றி மங்கள அவ்வாறுதான் சொன்னார்.

ஒன்பதாம் திகதி அதிகாலை அலரி மாளிகையில் படுபயங்கரமான சூழ்ச்சியொன்று நடந்தேறப் போனதாகக் கூறி கதையொன்று காட்டுத்தீ போல நாடெங்கிலும் பரவியது. ஜனாதிபதி மைத்திரி தரப்பிலிருந்து மங்கள, ராஜித்த தொடர்ந்து இதுபற்றியே பேசிக் கொண்டிருக்கும்போது, மகிந்த தரப்பிலிருந்து ஜீ.எல், கம்மன்பில போன்றோர் மிகவும் சாந்தமான முறையில் எவ்வித குழப்ப நிலைகளுமின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அதிகாரங்களை மைத்திரிபாலவிடம் கையளித்தாரே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினர்.

மகிந்தவின் சூழ்ச்சி மேசையைச் சுற்றிலும் இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதிச் செயலாளர், பிரதம நீதியரசர் அமர்ந்திருந்ததாகவும், மகிந்தவின் சூழ்ச்சிமிகு கதைக்கு சட்ட மா அதிபரிடமிருந்தோ, பொலிஸ் மா அதிபரிடமிருந்தோ, இராணுவத் தளபதியிடமிருந்தோ ஒரு சிறு வசனம் கூட வெளிவரவில்லை ஆதலால்,
5
விடயம் “அபேஸ்” ஆகியதாக மங்கள கூறும்போது ஜீ.எல், கம்மன் பில போன்றோர்  மக்களின் விருப்பிற்குத் தலைசாய்த்து  அடுத்த கட்ட நடவடிக்கைகள் நடந்தேறவுள்ள முறைகள் பற்றியே கலந்தாலோசித்தாகக் குறிப்பிட்டனர்.


இதே சந்தர்ப்பத்தில் சென்ற பன்னிரண்டாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இது பற்றிக் கருத்துரைத்தார்.

“தேர்தலின் பின்னர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ சூழ்ச்சி செய்ததாக குறிப்பிட்டு எதிர்க்கட்சியின் கட்டவிழ்த்து விட்டுள்ள கதையை அறுவறுப்புடன் நிராகரிக்கின்றேன். உலகத் தலைவர்கள் பலரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் “மகிந்த ராஜபக்ஷ தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே தனது பதவியிலிருந்து விலகியது முன்மாதிரியான நிகழ்வாகும்” எனக் குறிப்பிட்டனர். தேர்தலுக்கு முன்னரேயே தேர்தலில் தோல்வியுற்றால் ஐந்து நிமிடம் கூட தனது பதவியில் இருக்க மாட்டேன்  எனக் குறிப்பிட்டார். அவர் அதனை தனது செய்கை மூலமும் வெளிக்காட்டினார் .”

அவரது உரை அத்துடன் முடிவுக்கு வரவில்லை.

மங்கள வெளிவந்தார். அது சென்ற 14 ஆம் திகதி. மங்கள குற்றவியல் விசாரணைத் திணைக்கள முன்றலில் இருந்து கதைத்தார்.

  “தேர்தல் முடிவுகளை நிறுத்துவதற்கு, இடைஞ்சல் விளைவிப்பதற்கு சூழ்ச்சி செய்வது எங்ஙனம் என கலந்தாலோசித்தனர். அன்றிரவே அவசர காலச்சட்டத்தை ஏற்படுத்தி கணக்கிடும் மத்திய நிலையங்களை இராணுவத்தினரை அனுப்பி முற்றுகையிடக் கதைத்தனர். தேர்தல்கள் ஆணையாளரின் அலுவலகத்திற்கு பனாகொட இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை அனுப்பி பயங்கர நிலவரமொன்றை ஏற்படுத்த கலந்துரையாடியதாக எங்களுக்கு நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் கிடைத்தன.”

இந்த சூழ்ச்சி பற்றி மங்கள சமரவீர குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்த சூழ்ச்சி தொடர்பில் நாங்கள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,  கருத்துரைப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டு,  இவை அரசியல் செயற்பாடுகள் எனவும், அதற்கு இராணுவத்தை இழுத்துக் கொள்ளக் கூடாது எனவும் இலங்கையின் முப்படைகளும் எப்போதும் இவ்வரசாங்கத்தின் கௌரவத்தைக் காப்பதற்காகவே செயற்பட்டு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றபோதும் அவை விழலுக்கிரைத்த நீராகின.

சூழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது


இலங்கையின் இராணுவத்தையும், இராணுவ புலனாய்வுப் பிரிவினரையும் நாட்டுக்குள் அச்சமுற்றதோர் சமுதாயத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தினர். எங்கள் நாட்டு வரலாற்றில் நாட்டு மக்களை அச்சமுறச் செய்வதற்காக இராணுவத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.  இராணுவப் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.  வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இவ்வாறான நிகழ்வு நடைபெறவில்லை. அந்நேரம் ஒருபுறம் பயந்த மனோபாவம் கொண்டவர்களை உருவாக்க முயன்றார்கள். மறுபுறம் புலிகள் அமைப்பின் சஷீதரன், சிவபாலன், குமரன் பத்மநாதன் போன்றவர்களைப்  பயன்படுத்திக் கொண்டார்கள். வடக்கு - கிழக்கு இரு மாகாணங்களினதும் பொதுமக்களை பீதிகொள்ளச் செய்து தேர்தலில் வாக்களிக்காதிருக்கச் செய்ய முயன்றனர்.

SLD_20150118_A0102அதேபேலா தேர்தல் தினத்தன்று பகல் வேளை, தேவையற்ற இடங்களுக்கும் இராணுவத்தினரை நிறுத்தும் உள்நோக்குடன் இராணுவத்தினரை தேர்தல் முகாமைத்துவத்திற்காக பயன்படுத்தும் முயற்சியும் இருந்தது. சூழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது ஞாபகத்திற்கேற்ப தேர்தல்கள் ஆணையாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் நன்றி கூற வேண்டும். இராணுவத்தினரின் தலையீட்டுக்கு இடம் கொடுக்காமை தொடர்பில். மகிந்த ராஜபக்ஷவுடன் அதிகாரத்திலிருந்து வெளியேற விரும்பாத பிரிவினர் ஏதேனும் ஒருவகையில் அச்ச மனோபாவம் அற்றவர்களாக இருந்திருப்பின் அவர் 20 இலட்சம் வாக்குகளால் தோற்றிருப்பார். எது எவ்வாறாயினும் இது தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும். புலிகள் அமைப்பு இங்கிருக்கும் தொடர்புதான் என்ன? அதேபோன்று, ஏன் இராணுவத்தினரை பயன்படுத்த முனைந்தனர்? அது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அதேபோன்று, அது தொடர்பில் சம்பந்தப்பட்வர்களுக்கு   சட்டத்தை வலுவாக பயன்படுத்த வேண்டும். மேலெழுந்தவாரியாக நாங்கள் பதவியிலிருந்து விலகினோ எனக் கூறினாலும் அதன் உள்ளகத் தன்மை முற்றிலும் மாறுபட்ட தன்மைகொண்டது. பாதுகாப்புப் பிரிவை வியாபார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும், அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதும் மிகவும் ஆபத்தான காரியமாகும்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்

1 comments:

  1. හැමෝම ඇත්ත කියනවා කියන එක මහා පුදුම කතාවක් තමයි...

    අනේ ඉතිං අපි තමයි "........හාපෝයි..!!!

    ReplyDelete