It

Saturday, October 31, 2015

மகிந்த - கப்ரால் அநுசரணையில் 40 தொன் தங்கம் களவாக விற்கப்பட்டுள்ளது! -ராவய


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் அனுசரனையோடு மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் சந்தேகத்துக்குரிய தரகர்கள் சிலர் மூலமாக 40 மெட்ரிக் தொன் தங்கம் இலங்கையில் இருக்கும் ஜப்பான் கம்பனியொன்றாகிய ''ஜபூடா ஹோல்டிங்" ஊடாக ஜப்பனிலுள்ள வரையறுக்கப்பட்ட ''சுஷ்செய் செகியுரிடீஸ்"கம்பனிக்கு விற்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த சாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 



1 கிலோ தங்கம் 46000 அமெரிகன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கமிஷன் 1 கிலோ தங்கத்திற்கு 2000 ம் அமெரிகன் டொலர் வீதமாகும். இந்த வியாபாரம் சகலதும் முறையற்ற, சந்தேகத்துக்கிடமான விதமாகவே நடாத்தப்பட்டுள்ளன. இந்த தங்கம் கே பீ யிடமிருந்து அல்லது எல் டீ ஈ ஈ யிடமிருந்து கைப்பற்றவையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.



இந்த கொடுக்கல் வாங்குதலில் இடைத்தரகராக செயல்பட்டுள்ள ஒருவர் வெள்ளவத்தை, கயா வீதி ,இலக்கம் 14 5/2 எனும் முகவரியைச் சேர்ந்த ''ராஜ கோபால் கார்த்தீபன்" என்பவராவார். (அடையாள அட்டை இலக்கம் 833433342 வீ) மத்திய வங்கியின் இடைத்தரகராக செயல்பட்டவர் வத்தளை, ஹெந்தல வீதி, பல்லிய வத்த வீதி 77 ஆம் இலக்கத்தில் வசிக்கும் ''சுப்பையா சோமசேகரன்" ஆவார். (அடையாள அட்டை இலக்கம் 572573389 வீ) இந்த நபர் தனக்கு கிடைக்கும் கமிஷனிலிருந்து மேலும் 7 பேருடன் சம பங்குகளாக பங்கிட்டுக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார். 


இந்த ஒப்பந்தத்தை தயாரித்த சட்டத்தரணியின் பெயர் ''சம்பத் சமிந்த கமகே" ஆவார். அந்த 8 பேரினதும் பெயர்கள், வங்கி கணக்கிலக்கம் ஆகியன பின் வருமாறு(1) : டப்ளிவ். கே.ஈ.ஜே. ஏ. சோவிஸ் - மகரகம செலான் வங்கி கணக்கிலக்கம் 004031479826078. (2) என்.வை.சீ.எஸ். குமார - கொமர்ஷல் வங்கி, சிலாபம். கணக்கிலக்கம் 8430002649 (3) கே. ஜெயராணி, மக்கள் வங்கி தலைமையகம்.கணக்கிலக்கம் 204 - 2 - 001 - 4 - 0004005(4) எச். எம். ஜீ. எஸ்.கே. செனவிரத்ன. ஹட்ட நெஷனல் வங்கி, கல்கிஸ்ஸ கிளை. கணக்கிலக்கம் 061020042575 (5) ஐ.பீ.யு. கருணாரத்ன, இலங்கை வங்கி, சீதூவை கிளை. கணக்கிலக்கம் 72013332 (6)கே.எம்.ஐ.சமரசிங்ஹ. சம்பத் வங்கி, மஹரகம கிளை, கணக்கிலக்கம் 1013 - 5020 - 8535 (7) வை.என்.இலங்ககோன். கொமர்ஷல் வங்கி, கம்பஹ கிளை, கணக்கிலக்கம் 8440039577 (8) எஸ். சிரிதரன். கொமர்ஷல் வங்கி. கணக்கிலக்கம். 8800015721..



''ராவய" 01.11.2015 முன் பக்க தலைப்பு செய்தி.




(தமிழாக்கம் எம்.எல்.ஹாஜா சஹாப்தீன்)

0 comments:

Post a Comment