It

Sunday, January 24, 2016

“சிங்க லே” அமைப்பு நாம் பேசக்கூடிய அளவு முக்கியம் வாய்ந்தல்ல! - ஜனாதிபதி

சிங்க லே அமைப்பு, நாம் பேசக்கூடிய அளவுக்கு பெறுமதிமிக்க அமைப்பொன்றல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பீபீஸி - அஸாம் அமீனுடனான விசேட
நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பேசப்படுகின்ற “சிங்க லே” அமைப்பு பற்றிக் கருத்துரைக்கும்போது ஜனாதிபதி, “நாங்கள் பெறுமதி வாய்ந்தவை பற்றி மட்டுமே பேச வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

தான் இந்நாட்டு மக்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரச தலைவர் என்றவகையில், நாட்டுக்குத் தேவையான - கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் பற்றி மட்டுமே கலந்துரையாட வேண்டும் எனவும், எவ்விதத்திலும் நாட்டுக்குப் பொருத்தமற்றவை பற்றிக் கலந்துரையாடக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

அவ்வாறாயின், இது மக்களிடையேயான ஒருமைப்பாட்டுக்குப் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தாதா என பீபீஸி வினவியபோது, இவ்வமைப்பின் உண்மையான முகம் பற்றி சமூகத்தில் இருக்கின்ற அறிஞர்களும் புத்திஜீவிகளும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.

“தேவையானவை எவை, தேவையற்றவை எவை என்பது தொடர்பில் சமூகத்திலுள்ள புத்திசாதுரியம்மிக்கவர் நன்கு தெரிந்து கொள்வர்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல, அவர் தனது மகனை ஐக்கிய நாடுகள் அமைப்புக்குத் தன் மகனை அழைத்துச் சென்றது அரசனாக்குவதற்கும் எண்ணத்தில் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

பெற்றோர் தமது மகன்மாரிடத்தில் எவ்வளவு அன்பாக இருக்கின்றனர் என்பதை மகன்மார் உள்ள பெற்றோர் அன்றி மகன்மார் இல்லாத பெற்றோர் ஒருபோதும் அறிய மாட்டார்கள். அது அரச நிருவாகம் தொடர்பான பிரச்சினையல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இணையத்தளங்களில் தங்களைப் பற்றி விமர்சிக்கப்படுகின்றதே என்று கேட்கப்பட்டபோது,

இணையத்தளங்கள் எல்லாமே உண்மையைச் சொல்கின்றனவா? மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட தொழிநுட்பம் இன்று வித்தியாசனமான கோணங்களில் செல்கின்றன. இணையத்தளங்களில் வெளிவரும் எல்லா விடயங்களுக்கும் விடை சொல்லிச் சொல்லியிருக்க எனக்கு நேரமில்லை. எங்களுக்கு பாரிய திட்டங்களும் செயற்படுத்துவதற்காக காரியங்களும் உள்ளன. 

ஊடகங்கள் வெளியிடுகின்ற கூற்றுக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்றில்லை. கருத்துக்களை ஊகித்து வெளியிடுகின்ற ஊடகங்கள்தான் அவற்றிற்கு பதில் சொல்லவும் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)







0 comments:

Post a Comment