It

Saturday, October 22, 2022

ஹலாலுக்கு எதிராக எழுந்து, உல்லாசப் பயணத்துறையை இல்லாதொழிக்கும் வேடதாரிகள்!


வார நாட்களில் காலை 10.30 மணிக்கு ஒலிபரப்பாகும் நிவ்ஸ் பெஸ்ட்டின் 'ஜாத்திக மெஹவர' நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பேட்டி நிகழ்ச்சியொன்றிலிருந்து....

பேட்டியில் கலந்துகொண்டவர் - நிலந்த ரணசிங்க


தமிழில் - கலைமகன் பைரூஸ்

--------------------------------------------------------------------

அறபு நாடுகள் மக்களுக்கு 'ஹலால்' உணவை வழங்குகின்றன. இலங்கையில் 'ஹலால்' உணவு இல்லை. நம்மவர்கள் சாப்பிடாமல்

இருப்பதில்  எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. ஆயினும் வௌிநாட்டவர்கள் வந்தால் - மலேசியர்கள் இலங்கைக்கு வந்தால் அவர்களுக்கு அந்த உணவு வழங்கப்பட வேண்டும். 

அரசியல்வாதிகள்தான் எங்கள் நாட்டைக் குட்டிச் சுவராக்கினார்கள் என்பதை அதிலிருந்தே எங்களுக்கு நன்கு தௌிவாகின்றது. சுற்றாலப் பயணத்துறையிலிருந்து அனைத்தையும் மதகுருமார்களிலிருந்து அதாவது ஒருசில மதகுருமார்களிலிருந்து அரசியல் சார்புடையவர்கள் முழுமையாக இல்லாதொழித்திருக்கின்றார்கள். 

பொதுமக்களின் தலைகளுக்குள் 'ஹலால்' எங்களுக்குத் தேவையில்லை எனப் போட்டுவிடுவார்கள். இல்லாவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் எங்களுக்குத் தேவையில்லை. இவ்வாறு சொன்னவுடன் எங்கள் இலங்கை மக்கள் உடன் அவற்றை ஏற்றுக்ெகாள்வார்கள்... 

ஏதேனும் ஒரு கடைக்குப் போவதாக வைத்துக்கொள்வோம். அங்கு போய் இதுபற்றிப் பேசுவார்கள். அவர்கள் அவற்றை உடன் ஏற்றுக் கொள்வார்கள். உண்மையில் கிராம மக்களுக்குக்கூட நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணப்பாடு இல்லை. ஒரு விடயத்தைச் செய்ய இயலுமானவருக்கு அதனைச் செய்யவிடுவதுமில்லை. 

அரசியல்வாதி அல்லது யாரேனும் ஒரு மதகுரு  ஏதேனும் ஒரு மார்க்கத்தை வம்புக்கு இழுத்து, அதனைப் பற்றிப் பேசுவார். பேசுபவர்கள் வெற்றிபெறுவார்கள்.. நாடு பொருளாதார ரீதியிலும் இன்னும் பலவாறும் குட்டிச்சுவராகும். 

நல்லதொரு உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன். சென்ற காலப்பகுதிகளில் 'ஹலால் வேண்டாம், ஹலால் வேண்டாம்' என்று கூக்குரலிட்ட மதகுருமார்கள் கடைசியில் வௌிநாட்டுக்குச் சென்று, அறபிகளின் ஹலால் மேசைகளில் இருந்துகொண்டு அங்குள்ள மதகுருமார்களுடன் உணவு உட்கொள்கிறார்கள்.... அதனை நாங்கள் புகைப்படங்களில் கண்டோம் அல்லவா? 

எனவே நாங்கள் இவ்வாறு நாட்டைக் குட்டிச் சுவராக்குபவர்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவ்வாறு கைதுசெய்து அவர்களின் வாயினாலேயே ஒப்புக்ெகாண்டு, நாட்டு மக்களிடம் பொதுமன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும். நாட்டு மக்கள் எல்லோரிடமிருந்தும் மன்னிப்புக் கோரச் செய்ய வேண்டும். 

இன்று இலங்கை டொலர் இல்லாமல் அல்லல்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தான். 

அன்புறவுகளே,

எனது 'பரிவர்த்தனம்' வலைத்தளத்தைத் தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தளத்தினூடாக சிங்களத்தில் வௌிவருகின்ற, தமிழில் வௌிவராத கட்டுரைகளே என்னால் பெரும்பாலும் மொழிபெயர்ப்புச் செய்து இற்றைப்படுத்தப்படுகின்றன. 


0 comments:

Post a Comment