It

Saturday, October 22, 2022

கோட்டாவும் லிஸ் ட்ரஸும் - சம்பிக்க ரணவக்க

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்று சமூக அழுத்தங்களை அகற்றாவிடின் சமூக பிற்போக்குத்தனத்தை தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் திரு.பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய திரு.பாடலி சம்பிக்க ரணவக்க;

 தாமதமாக இருந்தாலும் 22வது திருத்தத்தை கொண்டு வந்தமைக்காக நீதி அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்பார்க்கப்படும் 19வது திருத்தம் போன்று ஏதோ ஒரு வகையில் ஜனாதிபதியின் அதிகாரத்தை பாராளுமன்றத்துடன் சமநிலைப்படுத்துவதற்கு சில நல்ல நிலைமைகள் உள்ளன. இந்த அரசியலமைப்பு திருத்தத்தை நாம் தற்போது வங்குரோத்து அரசியலுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். அதிகார அரசியல் சில நேரங்களில் தேசிய அடையாளம் மற்றும் மத அடையாளத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், அரசுக்கு பலன் கிடைக்குமா? எதிர்க்கட்சிக்கு பலன் கிடைக்குமா? அதை சமாளிப்போம். இது அப்படிப்பட்ட அடையாள அரசியலோ அதிகார அரசியலோ அல்ல. வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பாராளுமன்றத்திற்கு வெளியே மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.

எனவே இவ்விடயத்தில் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எங்கள் கட்சியின் நிறுவனரும், எங்கள் கட்சியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவரின் அதிகாரங்கள் குறைந்து வருகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சிந்திக்காமல் இது தொடர்பில் வெளிப்படையான தீர்மானத்தை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் உங்களுடையது மட்டுமல்ல, இந்த முழு நாட்டின் எதிர்காலமும் நாம் செய்யும் சீர்திருத்தங்களில் தங்கியுள்ளது. இங்கே கொள்கை என்ன? கொள்கை நிலைத்தன்மை, ஜனநாயக சுதந்திரம்.

 இங்கிலாந்தில் என்ன நடந்தது என்று பார்த்தோம். கோட்டாபய ராஜபக்ஷ, டிசம்பர் 01, 2019 அன்று முதலாளிகளுக்கு தாராளமான வரிச் சலுகைகளை வழங்கினார், திருமதி லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தில் செய்தார். சந்தை, நிதி நிதி மற்றும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்வினை ஏற்பட்டது. அவரும் 45 நாட்களுக்குள் இராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயக நாடுகள் செயற்படும் முறை. இலங்கையும் 2/3 அதிகாரத்தை கையில் வைத்திருந்ததால், இந்த நாடு வங்குரோத்து ஆகும்வரை தனது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றவில்லை. கரிம விவசாயத்திற்கு 100% செல்வது, வரிச்சலுகைகள் கொடுப்பது, டொலரை 203 ரூபாயாக வைத்திருக்க 5.5 பில்லியன் டொலர்களை வீணடித்தது, IMF கடனை நிலைநிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று 3000 பில்லியன் ரூபாய் பணவீக்கத்தின் விளைவாக பணவீக்கம் 66% ஐ எட்டியுள்ளது.

இன்று நாட்டு மக்கள் அதிக மின்சாரக் கட்டணத்தாலும், அதிக எரிபொருள் கட்டணத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்குக் காரணம் ஜனநாயகப் பிற்போக்குத்தனம். ஜனாதிபதி ஏதாவது ஒரு வகையில் பாராளுமன்றத்துடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டிருந்தால் இந்த நிலைமை வேறு வழியில் செல்லக்கூடியதாக இருந்திருக்கும். மத்திய வங்கியும் நிதி அமைச்சும் இதையே எதிர்பார்க்கின்றன. அது வெறும் பணம். சமூக அழுத்தத்திற்கு என்ன நடக்கிறது என்று நான் பார்க்கவில்லை. எனவே, வரிகள் மீது வரிகளை விதித்து, வருவாயை அதிகரிக்க முயற்சிப்பதன் மூலமும், இறக்குமதியை மட்டுப்படுத்துவதன் மூலமும் இந்த நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்க முயற்சிக்கின்றனர். அதன் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்படும்? எத்தனை வேலைகள் இழக்கப்படும்? எவ்வளவு வருவாய் இழப்பு என்பதை அவர்கள் பார்ப்பதில்லை.

2019 ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2000 கிலோவைப் பெறாத 1.5 பேர் மட்டுமே இருந்தனர். இன்று அது 6.5 ஆக அதிகரித்துள்ளது. பொது வறுமை அதிகரித்துள்ளது. 2019 இல் மக்களின் வருமானத்தில் 32% உணவுக்காக செலவிடப்பட்டுள்ளது. இன்று 75 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. எனவே, நிதி ஸ்திரத்தன்மைக்கான தேடலில், சமூக ஸ்திரத்தன்மை அல்லது பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருபுறம் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் சமநிலை ஏற்படுத்தப்பட்டு, சமூக அழுத்தத்தின் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாவிட்டால், அடுத்த சுற்றில் சமூகத்திலிருந்து பாரிய எதிர்த்தாக்குதல் ஏற்படும். கடந்த 74 ஆண்டுகளாக தேர்தல் மூலம் ஆட்சியை மாற்றிய வரலாறு உண்டு. ஆனால், நேரடி நடவடிக்கை மூலம் மே 9ஆம் திகதி அரசு பதவி பறிக்கப்பட்டது. மேலும், ஜூலை 9ஆம் திகதி, மிகவும் சக்திவாய்ந்த நபரை நாட்டிலிருந்து விரட்டியடிப்பதில் மக்கள் நடவடிக்கை வெற்றி பெற்றது.புதிய சமூகச் சூழலில், அரசியல் சாசனத்துக்கு அப்பால் செயல்படக்கூடிய புதிய தலைமுறை இளைஞர்கள் உருவாகியிருப்பதை மறந்துவிடக் கூடாது. இந்த நேரத்தில் நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்என்றார்.

ஊடக பிரிவு

(சிங்களத்திலிருந்து தமிழில் - கலைமகன் பைரூஸ்)

2022/10/22

0 comments:

Post a Comment