It

Wednesday, August 19, 2015

சிங்களவர்களுக்கிடையில் பிளவு! அந்நிய மதத்தினர் தங்களுக்கான இருப்பில் உறுதி! – ஞானசார

அபாயம் அருகாமையில் இருக்கும்வேளையில், சிங்களவர்கள் பிளவுபட்டுக் கொண்டிருக்க அந்நிய மதத்தினர் தங்களுக்கான இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை இந்த பொதுத் தேர்தல் தெளிவுபடுத்துகின்றது என பொதுஜன பெரமுனவின் தலைவரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருமான கலகொடஅத்தே

சிங்களவர்களின் பதவி மோகம் காரணமாக எதிர்காலச் சந்ததியினர் மிகவும் பாரிய எச்சரிக்கையை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்  -


'தற்போதைய நிலையில் நாடு பாரிய அபாயத்திற்குள்ளாகியுள்ளது. எங்களது சிங்களவர்கள் பல்வேறு கட்சிகளாக பிரிந்து அதிகார பேராசையில் வீழ்ந்திருப்பதனால், ஏனைய மதத்தவர்கள் தங்களின் இருப்பை நிலைநிறுத்த ஆவன செய்துள்ளனர் என்பதை தேர்தல் தெளிவுறுத்துகின்றது.


சிங்களவர்களின் அதிகாரப் பேராசை எங்களின் எதிர்கால சந்ததியினர் அபாய நிலையை சந்திக்க ஆவன செய்துள்ளது. எங்களது பொதுஜன பெரமுன இந்தத் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றது. நாட்டின் மீதும், தம் மதத்தின் மீதும் அன்பு செலுத்தக்கூடியவர்களை ஓரணியில் இணைப்பதற்கு எங்களால் முடிந்துள்ளது. நாங்கள் பாரியதொரு வெற்றியை எதிர்பார்க்கவில்லை. எங்கள் கட்சியை நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவையே எங்களுக்கு இருந்தது. எங்களுக்கு ஊடகங்கள் இடமளிக்கவில்லை. செலவு செய்வதற்கு எங்களிடம் பணம் இருக்கவில்லை. ஆகவே இந்த வெற்றி பாரிய வெற்றியே!


எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு எதிரான சக்திகள் மேலும் வேகமாக செயற்படும். அந்த தீய சக்திகள் பற்றி நாங்கள் இப்போதே நாட்டு மக்களுக்கு தெளிவுறுத்துவோம். விளித்திருங்கள்… அபாய எச்சரிக்கை கைக்கெட்டிய தூரத்தில் இருக்கின்றது. நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல் இருக்கும்போது பெரும்பான்மையினர் தனிநபர் நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும். நாட்டின் எதிர்கால நன்மை நாடி எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் கடவுள் துணை.“ எனக் குறிப்பிட்டார்.

தமிழில் – கலைமகன் பைரூஸ்
நன்றி – திவயின

0 comments:

Post a Comment